Local

அமைச்சின் செயலாளர்கள் மாற்றப்படும் சாத்தியம் – கடமை தவறியவர்கள் நீக்கம்

அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருத்தத்தின் கீழ் சில அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் நலக் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டம் கட்டமாக மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உரிய சேவை கிடைக்கவில்லை என பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading