Local

அமைச்சுப் பதவிக்காக மொட்டு கட்சிக்குள் மோதல்!

அமைச்சு பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்தும், பல்வேறு தரப்புகள் ஊடாகவும் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி, பிரதமரைத் தவிர, ஏனைய 23 அமைச்சுக்களுக்கு ஏற்கனவே 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சுமார் 10 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன், ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading