Local

அமைச்சுப் பதவி தரவில்லை என்னை ஏமாற்றி விட்டனர் கீதா தெரிவிப்பு!

எனக்கு அமைச்சுப் பதவி தரவில்லை.
ஏமாற்றியவர்களுக்கு கடவுள் தான் தண்டனை வழங்க வேண்டும் என
கீதா குமாரசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் 53 பிரதான தூண்களில் நான் மட்டுமே இங்கே இருக்கிறேன். எனக்கு அமைச்சுப் பதவி தரப்படவில்லை.இந்த அரசாங்கத்தின் பெண் எம்.பீக்கள் மூவரில் இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு விட்டது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரபல நடிகையுமான கீதா குமாரசிங்ஹ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பெண் குலம் ஏமாற்றப்பட்டுவிட்டது. நான் ஏமாற்றப்பட்டேன் கட்சிக்காக நான் பெரும் அர்ப்பணிப்புக்களை செய்திருக்கிறேன். என்னை ஏமாற்றியவர்களுக்கு இறைவன் தான் தண்டனை வழங்க வேண்டும். என குமாரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading