LocalNorth

அமைதியைக் குலைத்தால் சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்! – யாழ். கட்டளைத் தளபதி எச்சரிக்கை

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிட்டால், இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும், வீதிகளில் மீண்டும் முகாம்களை அமைத்து, சோதனைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார், யாழ்ப்பாணம் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி.

வட்டுக்கோட்டை பகுதியில், இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளம் ஒன்றை பொதுமக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“சிங்கள மக்களும் இலங்கை இராணுவத்தினரும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர்.

அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், பொலிஸாரும், இராணுவத்தினரும், வீதியோரங்களில் முகாம்களை அமைத்து, வீதியில் செல்வோரை வழிமறித்துச் சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும். அதனால், இந்த அமைதியான வாழ்வை தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டும்.

இந்த அமைதியை யாராவது குலைக்க விரும்பினால், அவர்களுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்காமல், அவர்களை வலுவிழக்கச் செய்து, நாட்டின் அமைதியைப் பேணுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading