Local

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் பிடிக்குள் சென்றிருப்பது இந்தியாவுக்கு ஆபத்து!

இலங்கை நாட்டின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் பிடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஐரோப்பியாவுக்கும், ஆசியாவுக்கு இடையிலான கடல்வழியில் இலங்கையின் தென்பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருப்பது அம்பாந்தோட்டை துறைமுகம். இதனை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு அளித்திருக்கிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள வைகோ, சீனாவின் ராணுவ தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading