Local

அம்பாறையில் படையெடுக்கும் பாம்புகளால் மக்கள் அச்சத்தில்!

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் பாம்புகளின் படையெடுப்பு அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலையில் வயல் பகுதிகளில் பாம்புகளுடன் ஒருவகையான புதிய இன புழுவும் தமது வயல் நிலங்களில்

காணப்படுவதாகவும் விவசாயிகள் அச்சத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் இப் பாம்புகளின் தாக்கத்தினால் அண்மைக் காலமாக பல விவசாயிகள் வைத்தியசாலைகளில்

அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே இவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு விவசாய அமைப்புக்களும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading