Local

அரசமைப்பை மைத்திரி மதிக்கவேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் அறவழிப் போராட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் சமூக அமைப்புக்கள் இன்று அறவழிப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரி, நாட்டின் அரசமைப்புக்கு மதிப்பளித்து நடக்கவேண்டும், அவரது 2015 ஜனவரி 8 தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் ஆகிய இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த அறவழிப் போராட்டம் ஆரம்பமாகும் என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading