Local

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் தெரிவிப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள் இதனால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை மாறாக அவர்கள் தங்களுடைய சுயநலனுக்கா பல அறிக்கைகளை விடுவதும் வீரப் பேச்சுக்களை  பேசியே மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் தேர்தல் காலத்தில் பல கட்சிகள் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கிறார்கள் ஆனால் அவர்களால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது மேலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை யார் தீர்ப்பது? எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவர்கள், எங்களது நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பாதையில் எங்களுக்கு ஆதரவை தருகின்றவர்களோடு நாங்கள் பேசுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தேர்தலின் பின் ஆட்சியமைப்பார்களாக இருந்தால், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கின்ற புதிய அரசியல் யாப்பு விடயத்தில் கூடிய அக்கறையக் காட்டுகின்ற செயற்பாட்டிற்கு முன்வந்து, பூரண ஒத்துழைப்பை தர முன்வருவார்களாக இருந்தால், அவர்களது அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவை தெரிவிக்கக்கூடிய சூழல் உருவாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading