Local

அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டாராம் மஹிந்த!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் எனது சேவையை எதிர்பார்க்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

‘‘கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிமட்ட கட்சி ஆதரவாளர்களும் மக்களும் எம்மைவிட்டு நகரவில்லை. இது பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் அனைவருக்கும் நிரூபணமானது.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இது போன்ற செயல்களால் கட்சியின் பலத்தை காட்ட முடியும். மாநாட்டின் ஊடாக எமது பலம் என்ன என்பதை அனைவரும் அறிந்திருப்பர்.

பொதுஜன பெரமுனவின் மீது மக்களுக்கு இன்னுமும் நம்பிக்கை உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை. ஆனால் கட்சி யாரை தீர்மானித்தாலும் வெற்றிபெற பாடுபடுவேன்.‘‘ எனவும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading