Local

அரசியல் எதிர்காலத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் ரணில் அறிவுரை

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நேற்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கட்சிப் பிரமுகர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆராயப்படவுள்ளது.

அதேசமயம் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்க விசேட குழுவொன்றையும் நியமிக்க இங்கு பேசப்படவுள்ளது.

நேற்றைய சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலவத்துவல ,கயந்த கருணாதிலக்க ,விஜேபால ஹெட்டியாராச்சி ,முஜிபுர் ரஹ்மான் ,சஞ்சய பெரேரா ஆகியோர் நேற்று மாலை ரணிலை சந்தித்துப் பேசினர் . சரியான முடிவுகளை எடுக்காமல் அரசியல் எதிர்காலத்தை இல்லாமல் செய்துகொள்ள வேண்டாமென ரணில் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இன்று கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்துள்ள ரணில் அவர்களுடன் தேர்தல் வியூகங்களை பற்றி கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading