Local

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துள்ளது!

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன்படி ,ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாடு இப்போது நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

இலங்கை சர்வதேச கடன் சுமைகளால் வரலாற்றில் என்றுமில்லாத அளவு நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.

மேலும் ,நாடு எதிர்கொண்டுள்ள இந்தப் பொருளாதார சரிவுக்குத் தீர்வு காண அரசு தயங்கக்கூடாது என்பது முதலாவது அடிப்படையாக இருந்தாலும், அரசிடம் நாட்டை மீட்கும் வேலைத்திட்டம் ஒன்றும் இல்லை – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading