அரசு கப்பல்போல் மூழ்கப் போகிறது வெளியே வாருங்கள் தயாசிறிக்கு வெல்கம அழைப்பு!

“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல், துணிகரமாக வெளியே வாருங்கள். அவ்வாறு வந்தால் அரவணைத்து பயணிக்க தயார்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
இது தொடர்பில் அவர் கூறியதாவது,
” சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் எனது சிறந்த நண்பர். தற்போது பத்திக் அமைச்சு குறித்து அழுது புலம்புகின்றான். நான் அமைச்சு பதவியின் பின்னால் ஓடவில்லை. எனவே, என்வழியை தயாசிறி பின்பற்ற வேண்டும். இந்த அரசு கப்பல்போல் மூழ்கப்போகின்றது. எனவே, துணிகரமாக வெளியேறுமாறு நான் கோருகின்றேன்.
எனது பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. ஒரு கட்சி இல்லையேல் 10 கட்சிகள் உள்ளன. எதாவது ஒரு கட்சி எனக்கு கிடைக்கும். ” – என்றார் வெல்கம.
