Local

அரச கட்டிடங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்!

நாட்டில் அமைதியை  ஏற்படுத்தும் வகையில்  ஜனாதிபதி மாளிகை ஜனாதிபதி செயலகம்  அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம்  ஆகியவற்றில் இருந்து  வெளியேறுவதற்கு  போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் கடந்த    9 ஆம் திகதி    இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் விளைவாக   போராட்டக்காரர்கள்  குறித்த பகுதிகளை கையகப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தாங்கள்  தங்கியிருந்த ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி  மாளிகை உள்ளிட்ட அரச கட்டிடங்களை  கையளிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்

எனினும் ஜனாதிபதி செயலகத்தை கையளிப்பது தொடர்பில் போராட்டக்காரர்கள் உறுதிப்படுத்தவில்லை,

காலி முகத்திடல் பகுதியில் இன்று  முற்பகல் இடம்பெற்ற  ஊடக  சந்திப்பில்     போராட்டக்காரர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading