Cinema

அருண் விஜய்- எமி ஜெக்சன் கூட்டணியில் மிரட்டும் மிஷன்!

அருண் விஜய் மற்றும் எமி ஜன்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன்‘ திரைப்படத்தின் டீசர் காட்சி இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே‘ என்ற படத்தின் பெயர்  ‘மிஷன்‘ சப்டர்-1 என மாற்றப்பட்டுள்ளது.

அதிரடிக் கதைக்களத்தைக் கொண்டுள்ள இந்தப் படத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜக்சனின் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகிலுள்ள முக்கிய குற்றவாளிகளைச் சிறைப்படுத்தி வைத்துள்ள இலண்டன் சிறைச்சாலையொன்றில் நடைபெறும் முக்கிய சம்பவமாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளமை குறித்த காட்சியில் தெரியவருகிறது.

மேற்படி சிறைச்சாலையின் அதிகாரியாக எமி ஜாக்சன் நடித்துள்ளதுடன் சிறையில் இருக்கின்ற அருண்விஜய் தப்பிப்பது மற்றும் தனது குழந்தையைப் பார்க்க எடுத்த முயற்சி கைகூடியதா என்பது படத்தின் சாரம்சமாக இருக்கும் எனத் தெரியவருகிறது.

அருண் விஜய், எமி ஜாக்சனுடன் நிமிஷா சஜயன், அபி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தில் அதிரடி, விறுவிறுப்புகள் நிறைந்துள்ளதால் திரை இரசிகர்களுக்குப் பெரும் விருந்தளிக்கும் படமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading