Sports

அரையிறுதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்!

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது..

முதல் பாதி போட்டியின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

2வது போட்டி நேரத்தில் 54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் போட்டி சம நிலையில் இருந்தது.

பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading