Local

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு…!!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

அதன்படி, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி:

கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading