அர்ஜுன் மகேந்திரன் பெயர் மாற்றி தலைமறைவு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரன் பெயர் மாற்றம் செய்து அர்ஜுன் அலெக்ஸன்டர் என்கிற பெயரில் தலைமறைவாக இருப்பதாக சர்வதேச பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால் ஏற்கனவே அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு பிடியாணையை அர்ஜுன் அலெக்ஸன்டர் என்கிற பெயருக்கு மாற்றியமைத்து தருமாறும் சர்வதேச பொலிஸார் இலங்கையிடம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
