Local

அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கை இளைஞன்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் தனது முதல் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து சாதித்துள்ளார்.

ஏஷ்லி சந்திரசிங்க என்ற 22 வயதுடைய இளைஞனே இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

விக்டோரியா மாநில அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் டாஸ்மேனியா மாநில அணிக்கு எதிராக இந்த நாட்களில் ஹோபார்ட்டில் நடைபெற்று வரும் போட்டியில் நேற்று முன்தினம் அவர் அந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஏஷ்லி தான் சந்தித்த முதல் 49 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்திருந்தார்.

எனினும் நேற்று முன்தினம் நாள் முடிவில் 333 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஏஷ்லி சந்திரசிங்க இதற்கு முன்னர் மாநில போட்டிகளில் விளையாடியிருந்தாலும் முதல் தர டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

இவரது ஆட்டத்தால் எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய தேசிய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading