Jobs

மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கலப்பு முறை உறுப்பினர் கட்டணங்களை Uber அறிமுகப்படுத்துகின்றது

 

இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற சவாரித் தளமாகத் திகழும் Uber, நாட்டில் மோட்டார் வாகன மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு கலப்பு முறை உறுப்பினர் கட்டணங்களை அறிமுகம் செய்து வைப்பது குறித்து இன்று அறிவித்துள்ளது. ‘முதலில் சம்பாதித்து, பின்பு செலுத்தும்’ (earn first, pay later) புதிய முறைமையொன்றை இது உள்ளடக்கியுள்ளதுடன், முன்கூட்டியே பணம் செலுத்தாது, இத்தளத்தில் வருமானத்தை ஈட்ட ஆரம்பிக்கும் பாரிய நெகிழ்திறனை இது ஓட்டுனர்களுக்கு வழங்குகின்றது. சவாரிகளுக்கு 0% கமிஷன் பணத்தின் நன்மையை ஓட்டுனர்கள் தொடர்ந்தும் பெற்றுப் பயனடைவதுடன், தாம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தாமே வைத்திருக்கும் அதேசமயம், உறுப்பினர் கட்டணத்தை வேறாகச் செலுத்துவதற்கு இது இடமளிக்கின்றது.

 

கலப்பு முறை உறுப்பினர் கட்டணங்கள் மூலமாக, தாம் வழங்கும் சவாரிகளுக்கு ஏற்ப சிறந்த முறைமையை ஓட்டுனர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், முழு நேர மற்றும் பகுதி நேர ஓட்டுனர்கள் Uber தளத்தில் சவாரிகளைப் பெற்று சம்பாதிப்பதை இலகுவாக்குகின்றது. ஓட்டுனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தி, சவாரி செல்பவர்களுக்கு தொடர்ந்தும் நம்பிக்கையான போக்குவரத்தை வழங்குவதை மேம்படுத்தும் நோக்குடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இரு சக்கர மற்றும் முச்சக்கர வாகனத் துறையில் உள்ள ஓட்டுனர்கள் மத்தியில் நெகிழ்திறன் மற்றும் வருவாய் சாத்தியங்கள் தொடர்ந்தும் முக்கியமான முன்னுரிமைகளாகக் காணப்படுகின்றன. தாம் இத்தளத்தில் ஈடுபடும் வழிமுறைகளை இன்னும் கூடுதலான அளவில் தமது கட்டுப்பாட்டில் பேணி, தமது வருமானத்தை கட்டமைத்துக் கொள்வதற்கு இப்புதிய முறைமை ஓட்டுனர்களுக்கு உதவுகின்றது. நேரத்தையும் மற்றும் வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட உறுப்பினர் கட்டணத் தெரிவுகளை வழங்கி, பாரிய நெகிழ்திறனை Uber ஓட்டுனர்களுக்கு வழங்குகின்றது. முழுநேரமாக ஓட்டுனர்களாக உள்ளவர்களுக்கு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட உறுப்பினர் கட்டணம் உகந்ததாக உள்ள அதேசமயம், பகுதி நேரமாக ஓட்டுபவர்களுக்கு வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட உறுப்பினர் கட்டண முறைமை உகந்ததாகக் காணப்படுகின்றது.

 

Uber Sri Lanka போக்குவரத்துத் துறையின் உள்நாட்டு முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன அவர்கள் இதை அறிமுகம் செய்து வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஓட்டுனர்களே எமது செயற்பாடுகளின் மையமாகவுள்ளனர். இலங்கையில் மோட்டார் வாகன மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு முதன்முதலாக உறுப்பினர் கட்டண முறைமையை அறிமுகப்படுத்தியவர்களில் நாமும் இடம்பெற்றுள்ளதுடன், கலப்பு முறை உறுப்பினர் கட்டணங்கள் மூலமாக, அதனை நாம் மேலும் ஒரு படி மேற்கொண்டு சென்று கமிஷன் பணத்தை முற்றாக விடுத்து அல்லது தாம் விரும்பும் வகையில் அதனைத் தெரிவு செய்வதற்கான நெகிழ்திறனின் நன்மைகளை ஓட்டுனர்களுக்கு வழங்குகின்றோம்.

 

பல்லாயிரக்கணக்கான மோட்டார் வாகன மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் இலங்கையில் அன்றாடம் Uber செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். தீர்வுகளின் தொடர்ச்சியான புத்தாக்கத்தினூடாக ஓட்டுனர்கள் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்களை வலுப்படுத்தும் அதேசமயம், சவாரி செல்கின்றவர்களுக்கு தங்குதடையற்ற அன்றாட போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதே Uber இன் நோக்கம்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading