Sports

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

எனினும், அஜிங்க்யா ரஹானே, ரவிந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 296 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அஜிங்க்யா ரஹானே 89 ஓட்டங்களையும், ஷர்துல் தாகூர் 51 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 48 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் பெட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி ஒரு ஓட்டத்தினை பெற்றிருந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 175 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் மொகமட் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும், மொகமட் சமி மற்றும் ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading