Local

அவுஸ்திரேலிய அரசாங்கம்,மக்களிடம் மன்னிப்பு கேட்க இலங்கை அமைச்சர்!

ஆஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோர விரும்புவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நான் மிகவும் கவலையடைகிறேன், இது தொடர்பில் தேவையான மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பை எனது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்” என அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading