Local

அவுஸ்திரேலிய இரவு நேர களியாட்ட விடுதிகளில் இலங்கை வீரர்களின் அட்டகாசம்!

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற டி/20 உலக போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் பலர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

வீரர்களின் நடத்தை தொடர்பிலான சம்பவத்திற்கு சாமிக்க கருணாரத்ன கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ​​ஆஸ்திரேலியாவில் இலங்கையின் பெருமளவிலான வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகமும் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை காட்டும் புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளன.

அணியின் பல வீரர்கள், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறி, போட்டிகளுக்கு இடையில் வெளியில் சுற்றித்திரிந்து, மோசமாக நடந்துக்கொண்ட சம்பவங்களுக்கு பின்னால், மதம் சார்ந்த குழு ஒன்று இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு காரணமாக மிகவும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸ், ஜெப்றி வென்டர்சே, வன்புணர்வு குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்படும் கடும் நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் யுவதிகளுடன் காணப்படும் பல புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading