Sports

அஸ்வினை நான் காயப்படுத்தியது மகிழ்ச்சி ரவி சாஸ்திரி தெரிவிப்பு!

இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது தன் இதயத்தை நொறுங்க செய்தது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார்.

அதற்கு ரவிசாஸ்திரி பதிலடி அளித்துள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், ” எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் உண்மையைக் கூறுவது தான் என் பணி. குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான். அது அஸ்வினி வித்தியாசமாக வீச செய்தால் அது நன்மை தானே.

அஷ்வின் சிட்னியில் ஆடவில்லை. குல்தீப் தான் ஆடினார். அவர் அருமையாக வீசினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயம்தான். நான் அஸ்வின் இடத்தில் இருந்தால் சவாலை ஏற்றுக்கொண்டு கோச் எப்படி தவறு செய்திருக்கிறார் என்று நிரூபிப்பேன்” என கூறினார்.

மேலும், “2018ல் அஸ்வினிடம் அவரது உடற்தகுதியில் 100% சரியாக வேண்டும் என்றுதான் கூறியதாகவும் அதில் அவர் சிறப்பாக பணியாற்றி தற்போது அஸ்வின் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றும் தெரிவித்தார். 

அவர் வேர்ல்டு கிளாஸ். 2019 மற்றும் 2021-ல் அஸ்வின் பயங்கரமாக வீசுகிறார். ஈகோ இருக்கவே செய்யும். ஆனால், ஈகோவை நாம் எப்படி கட்டுப்படுத்தி திசைவழிபடுத்துகிறோம் என்பது தான் முக்கியம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading