Local

ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன வெளியிடப்பட்டுள்ளன.

மூன்றாம் சுற்றுக்கான தகுதிகாண் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவிருக்கின்றது. இதில் இலங்கை குழு D இல் தாய்லாந்து, துர்க்மேனிஸ்தான் மற்றும் சீனா தாய்பேய் ஆகிய நாடுகளுடன் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் சுற்றுக்கான போட்டிகள் இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகுவதோடு இலங்கை தமது முதல் போட்டியில் தாய்லாந்தினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து (மார்ச் 25) எதிர்கொள்ளவிருக்கின்றது.

குழுக்கள்

குழு A

தஜிகிஸ்தான், பிலிபைன்ஸ், மாலைதீவுகள், டிமோர்-லெஸ்டே

குழு B

லெபனான், யெமன், பூடான், புரூனை தாருஸலாம்

குழு C

இந்தியா, ஹொங்கொங், பங்களாதேஷ், சிங்கப்பூர்

குழு D

இலங்கை, தாய்லாந்து, துர்க்மேனிஸ்தான், சீனா தாய்பேய்

குழு E

சிரியா, ஆப்கானிஸ்தான், மியன்மார், பாகிஸ்தான்

குழு F

வியட்நாம், மலேசியா, நேபாளம், லவோஸ்

போட்டி அட்டவணை (இலங்கை)

மார்ச் 25, 2025 – தாய்லாந்து (Away)

ஜூன் 10, 2025 – சீனா தாய்பேய் (இலங்கை)

ஒக்டோபர் 09, 2025 – துர்க்மெனிஸ்தான் (இலங்கை)

ஒக்டோபர் 14, 2025 – துர்க்மெனிஸ்தான் (Away)

நவம்பர் 18, 2025 – தாய்லாந்து (இலங்கை)

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading