Local

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதல்!

19 வயதிற்குட்பட்ட நல்ல த வஙஙஙஙந கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி தகுதி பெற முடிந்தது.

இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 22 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் இளையோர் அணி சார்பில் ஷீஸன் ஸமீர் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இளையோர் அணியினர் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

இலங்கை அணி சார்பில் மெதீவ் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அணித்தலைவர் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகள் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இந்த போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading