World

ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக பயணிக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய உறவினர்களின் துணையில்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக முறையாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் அனுமதிக்ககூடாது என்றும் பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading