Gossip

ஆண்,பெண் ஆடை அணிய தடை நிர்வாணமாக செல்ல அனுமதி!

பார்க்கிற்கு செல்லும் ஆண் பெண் இருவரும் ஆடை இல்லாமல் தான் செல்லனுமா? பாரீஸில் இருக்கும் இந்த பார்க் குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது.

நாம் அனைவரும் பொதுவாகவே வாக்கிங் செல்வதற்கு தேர்வு செய்யும் இடம் தான் பார்க். ஏனென்றால் அங்கு தான் மரத்தின் நிழலோடு மட்டுமில்லாமல், குளிர்ச்சியாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும் என்பதற்காக அதை தேர்வு செய்வார்கள். இருப்பினும் அங்கு செல்லும் போது மக்கள் டிராக்சூட் மற்றும் டி சர்ட் மட்டும் அணிந்து கொண்டு செல்வார்கள். மற்றபடி பார்க்கிற்கு  இந்த ஆடை தான் அணிந்து செல்ல வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் இல்லை.

பரவாயில்லைங்க..இங்கேயாவது வெறும் ஆடை விதிமுறை தான் இல்லை. ஆனால் பாரீசில் இருக்கும் ஒரு பார்க்குக்கு ஆண்/பெண் யாரும் ஆடையே அணிந்து செல்லகூடாதாம். அப்படி ஒரு பார்க்-காம்…வாங்க அதை பற்றி பார்க்கலாம்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் இந்த பார்க் அமைந்துள்ளது. Bois de Vincennes என்ற இடத்தில் உள்ள இந்த பார்க்கில் உள்ளே யாரும் ஆடை அணிந்து செல்ல அனுமதி கிடையாதாம். இந்த பகுதியே ஒரு நிர்வாண பகுதியாக தான் இருக்கிறதாம். இங்கு மனிதர்கள் சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் நடமாடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ஆடை மட்டும் அணிந்து செல்ல கூடாதாம். அதே சமயத்தில் இந்த பார்க்கில் பலத்த பாதுகாப்புகளும் அதிகமாகவே உள்ளதாம். இந்த பார்க்கிற்கு வரும் ஆண்/பெண் இருவரும் நிர்வாண விதியை சாக்காக வைத்துக்கொண்டு தவறான முறையில் நடக்க முயன்றால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி விடுவார்களாம். மேலும் இந்த நிர்வாண பார்க் ஒரு சோதனை முயற்சிக்காகவே திறக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். 

இதுவரை யாரும் பார்த்திடாத, கண்டிராத வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிர்வான பார்க் தற்போது  இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading