Local

ஆத்திரத்தை அடக்கலாம் ஆனால்… சவுதி நாட்டவர் இலங்கையில் கைது!!!

 

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சவூதி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இந்த சவூதி நாட்டு சந்தேகநபர் இன்று (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர் ரியாத்தில் இருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்துவரும் நிலையில், விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது சம்பவம் இடம்பெற்றது.

அந்த நேரத்தில் அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கை பெல்ட்களை அணிந்து அமர வேண்டும் என்ற விதிமுறையை மீறி, குறித்த நபர் கழிப்பறைக்கு செல்ல முயன்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் விமானப் பணிப்பெண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விமானப் பணியாளர்கள் விமானி வழியாக தகவல் வழங்கியதையடுத்து, விமானம் தரையிறங்கியதும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்து சந்தேகநபரை கைது செய்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading