76 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்ட நிகழ்வு.
பஞ்சாபில் அம்ரித்ஸர் மாவட்டத்தில் அஜ்னாலா தஹ்சிலுக்குட்பட்ட கோட் ராஜாதா கிராமத்தில் கடந்த 76 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசலில் சென்ற சனிக்கிழமை மக்ரிப் வேளையில் மும்பையிலிருந்து வந்த ஹெச் கே பதான் அவர்கள் முதல் முறையாக இறைவனின் புகழ் பாடுகின்ற பாங்கு சொன்னார்.
இந்தக் கிராமத்திலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக மும்பையிலிருந்து 27 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களுடன் ஹெச் கே பதானின் தலைமையில் அகீல் அன்சாரி உள்ளிட்டோர் மகாராஷ்டிரா கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாகச் சென்றிருந்தார்கள்.
அப்போது தங்களின் கிராமத்தில் 76 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கின்ற பள்ளிவாசலுக்கு உயிர் கொடுக்குமாறு கிராமத்து மக்கள் சொல்ல பஞ்சாப் மாநில ஷாஹி இமாமும் கோரிக்கை விடுக்க பல்லாண்டுகளுக்குப் பிறகு ராவி நதிக்கரையில் இருக்கின்ற அந்த அழகான, செழிப்பான கிராமத்தில் இறைவனின் புகழ் பாடும் பாங்கு ஒலித்தது.
(Azeez Luthullah)

You must be logged in to post a comment.