Local

மக்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை ? ரணில் கேள்வி!!

மக்கள் எனக்கு, ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கட்சி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.

1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை சீர்திருத்தங்களை, அக்காலத்தில் JVP உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தது. ஆனால், இன்று அதே கல்வி முறைமையை உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கிறது. பல முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு, ஏன் வாக்களிக்கவில்லை..?

கொழும்பு 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு ரணில் கேள்வியெழுப்பினார்.

இதன்போது பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்த கருத்து என்னவென்றால், ‘ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ஒரு தசாப்தம் முன்னோக்கிச் சிந்திக்கிறார். ஆனால், பொதுமக்கள் ஒரு தசாப்தம் பின்னால் நின்று சிந்திக்கிறார்கள்.’ இதனால், ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் பல சந்தர்ப்பங்களில் ஒத்துப் போகாமல் போனது ஒரு முக்கியக் காரணம் என்று கூறினர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading