Local

ஆபத்தான பிரதேசமாக
பொரளை அடையாளம் காணப்பட்டுள்ளது!

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 90 வீதமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.

சனத்தொகை பரம்பல் அதிகளவில் காணப்படும் இந்தப் பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் PCR பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று உறுதியானவர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நோய்த் தொற்றாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading