ஆபத்தான ரயில் பயணங்களில் இலங்கை மக்கள்!


கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை ஆபத்தான ரயில் பயணங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் 80 சதவீதமான தனியார் பேருந்துகள் பயணங்களை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அலுவலகம் செல்லும் மக்கள் ரயில்களிலேயே தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.
இதனால் ரயில்களில் இடமில்லாம் ரயில்களுக்கு மேல் அமர்ந்து உயிருக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
