World

ஆப்கானிஸ்தானில் காலடி எடுத்து வைக்கிறது சீனா!

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய சீனா தற்பொழுது ஆப்கானிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது.

அங்கே உள்ள கனிம வழங்களை சுரண்டவும் அன் நாட்டின் வறுமையை பயன்படுத்தியும் சீனா ஆப்கானில் நுழைய முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க துருப்பக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறியதை அடுத்து 20 ஆண்டுகளின் பின்னர் ஆப்கானை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை இது நாள் வரை தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் செய்து வந்த போதும் சீனா எந்த ஒரு தாக்குதலையும் இதுவரை நடத்தியதே இல்லை.

இந்த நிலையில் தலிபான்களின் மூத்த தலைவர்கள், சீனா தமது நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதனை சீனா மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ரஷ்யாவும் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

அத்துடன் ஆப்கான் நாடு மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டாம் என்று, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading