Sports

ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்தது.

இந்தியா இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி இந்தியாவை அபிஷியலாக தொடரை விட்டு வெளியேற்றி உள்ளது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கோப்பையை வெல்லும் முதன்மையான அணிகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தோல்வி இந்தியாவை தொடரை விட்டே வெளியேற்றி உள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிகளில் விளையாடுகின்றன.

2019 50 ஓவர் உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்தியாவை அவுட்பிளே செய்துள்ளது நியூசிலாந்து அணி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading