World ஆறு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்! May 31, 2022 Editor மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related