Local

ஆளும் கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் பேச்சுவார்த்தை!

தற்போதைய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது. அடுத்த ஆண்டு அரசியல் திருப்பமொன்று ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஐ.தே.க., எஸ்.ஜே.பி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த ஆண்டு உருவாகும்.இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் தற்போது எமது தலைவருடன் பேசி வருகின்றனர்.ரணில் விக்கிரமசிங்க. அவர் தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய திறமையான தலைவர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல.பொது எதிரி அரசாங்கமே. அடுத்தாண்டு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிறர் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்குவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

அரசியல் திருப்பம் ஏற்படும் என்பதால் அடுத்த வருடம் பொது எதிரணி கூட்டணி அமைக்கப்படும்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் எதிர்காலத்தில் விமான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். இலங்கை வழியாக விமானங்கள் பறக்க முடியாது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். இதன் விளைவாக டொலர் பிரச்சினை மோசமாகி விடும். உணவு பற்றாக்குறையும் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading