Local

ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 மாணவருக்கு அஞ்சலி!

முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் 8 பேருக்குமான அஞ்சலி நிகழ்வு நேற்று நண்பகல் ஐயன்கன்குளம் பகுதியில் இடம்பெற்றது.

மாணவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நேற்று மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சுஜாந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading