இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3 வீரர்களுக்கு கொரோனா!

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இ்ங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இத்துடன் இங்கிலாந்து அணியின் முகாமைத்துவ குழுவின் 4 உறுப்பினர்களும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து அணியின் புதிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அணியின் தலைவராக பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
