இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Bridgetownயில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் David Warner அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் Mitchell Marsh 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Jordan 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் அணித்தலைவர் Jos Buttler அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், Phil Salt 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Pat Cummins மற்றும் Adam Zampa ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
