Cinema

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மேடையில் கொடுத்த விருந்து!

பொன்னியின் செல்வன் பாடலை மேடையில் பாடி  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அரங்கத்தையே அதிர விட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் என்ற நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் பல திரைப்பட பாடல்களை பாடிய நிலையில் அதில் ஒரு பாடலாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான், ஜொனிதா காந்தி, பாம்பே பாக்யா உள்ளிட்ட பலர் பாடிய இந்த வீடியோ  இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலை பார்க்கும் போதே இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading