Cinema

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பளாகிறார!

பிரபல இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் ’99 Songs’ என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதுகுறித்து ரகுமான் கூறுகையில், “ஒரு தயாரிப்பாளராய் மாற வேண்டும் என முடிவெடுத்தது புதிதாய் பிறந்ததாக உணர்கிறேன். இது முற்றிலும் ஒரு புது விதமான உணர்வாக உள்ளது.
ஒரு இசை அமைப்பாளராக உருவாகும் போது எனக்கு இசையில் பத்தாண்டுகள் அனுபவம் இருந்தது. ஆனால், ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகும் போது முதலில் இருந்து தொடங்குவது போல் உள்ளது. இப்பணியிலும் எனது முழு திறமையையும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
தயாரிப்பாளராக நான் மட்டும் புதிது அல்ல. எனது இயக்குநர் மற்றும் நடிகர் ஆகியோரும் முதல் அறிமுகங்களே. இதனால் எங்களுடைய அத்தனை சிறப்புகளையும் வெளிப்படுத்துவோம். எனது தயாரிப்பாளர் பணிக்கு எனது மனைவியும் மகள்களும் மிகுந்த உறுதுணையாக இருந்தனர்” என்றார்.
ஏ ஆர் ரகுமானின் ’99 Songs’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ ஆர் ரகுமானின் YM மூவீஸ் நிறுவனத்துடன் ஐடியல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading