Cinema

இசையை மையமாகக் கொண்டு உருவாகும் “மியூசிக் ஸ்கூல்”

இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது.

‘மியூசிக் ஸ்கூல்’ படத்திலிருந்து வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது.

தற்போது முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல்,

குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார்.

மிக முக்கியமான ஒரு விஷயத்தை பொழுதுபோக்கு முறையில் 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது. அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading