Local

இட நெருக்கடியால் திணறும் இலங்கை சிறைச்சாலைகள்!

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் போதைப்பொருள் தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுகின்றனர்.

இதனால் விளக்கமறியலில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டம் திருத்தப்பட்டதை அடுத்து, ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க, ஐஸ் போதைபொருளுக்கு அடிமையான சுமார் 400 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 

அத்துடன், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 26,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading