Local

இத்தாலியில் இளம் பெண்ணை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய இலங்கையர் கைது!

இத்தாலியின் ரோம் நகரில் 17 வயதான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மிச்செல் மரியா காசோ கர்ப்பமாக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் நீண்ட நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரோமின் ப்ரிமாவல் மாவட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Michelle Causo, the 17-year-old Roman found dead
Michelle Causo, the 17-year-old Roman found dead
இளம் பெண் ஒருவர் தனது வயது ஒத்த இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை நூறு மீட்டர் தெருவில் கொண்டு சென்று, குப்பைப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டார்.

பிற்கபல் மூன்று மணியளவில் அந்த வழியாக சென்ற ஒருவர் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீண்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டுச் சென்றுள்ளனர்.

இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக ரோம் கெப்பிட்டலின் பாதுகாப்புக் கொள்கைகள், உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் சம வாய்ப்புகளுக்கான ஆளுநர் மோனிகா லுகாரெல்லி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞரை தற்காலிகமாக தடுத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இளைஞர் வசிக்கும் வீட்டின் சில இடங்களில் இரத்தத்தின் தடையங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராக்களை அதிகாரிகள் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading