North

இத்தாலி அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி இத்தாலி அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நேபாளம் அணி சார்பில் ஆரிஃப் ஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றார்.

இத்தாலி அணி சார்பாகப் பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி, 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கெட்டுக்கள் எதுவும் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இத்தாலி அணி சார்பில் அதிகபட்சமாக அந்தோணி மோஸ்கா 62 ஓட்டங்களையும், ஜஸ்டின் மோஸ்கா 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading