World

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று (21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடற்படுகையின் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வு ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு இடங்களிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading