Sports

இந்தியாவின் புதிய ஜெர்சியில் மீண்டும் டோனி!

இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, மீண்டும் இந்திய ஜெர்சி அணிந்த நிலையில் இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆன டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவுபெறுகிறது.

கிரிக்கெட்டில் எத்தனையோ பேர் இருந்திருக்கலாம். ஆனால் தலைவன் ஒருவனே. அவர் தான் மகேந்திர சிங் டோனி. இந்தியா கிரிக்கெட் அணிக்கு மிக சிறந்த கேப்டனாக இருந்து பல வரலாற்று சிறப்புகளை செய்துள்ளார்.

இவர் செய்த சாதனையை இன்றுவரை யாராலும் ஈடுகட்ட முடியவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்காக கேப்டன் டோனி கடைசியாக விளையாடிய போட்டியாகும்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தன்று அவரது இன்ஸ்டாகிராமில் இரவு 7.29 மணிக்கு தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.

இதற்கு பின் டோனியின் தரிசனம் கிடைத்து விடாதா என்று அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தல தோனி நடித்த புதிய விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை Zed Black’s TVC நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் தல தோனி இந்தியாவின் புதிய ஜெர்சியில் காட்சியளித்ததால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading