World

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.33 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.53 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.35 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கு 100-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

*அமெரிக்காவில் 66,740 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 884பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

*பிரேசிலில் ஒரே நாளில் 49,344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,070 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்/

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 332,503 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,256 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading