World

இந்தியாவில் ஒரே நாளில் 15 968 பேருக்கு கொரோனா வைரஸ்!

இந்தியாவில் ஒரே நாளில் 15 968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 இலட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 476 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 15 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 இலட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading