Local

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 488 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 2015 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 14 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,015 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 957 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் 36 பேர் கொரோனாவால் பலியாகினர் என தெரிவித்துள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading